search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோயம்பேட்டு மார்க்கெட்"

    லாரி வாடகை உயர்ந்த போதிலும் கோயம்பேட்டில் காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. #Vegetables #KoyambeduMarket

    சென்னை:

    டீசல் விலை அதிகரித்து வருவதால் லாரி வாடகை உயர்த்தப்பட்டது. அனைத்து சரக்கு வாகனங்களும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு நிர்ணயிக்கும் வாடகையை 25 சதவீதம் உயர்த்தி விட்டது. இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.

    ஆனால் அழுகும் பொருளான காய்கறிகள் விலை மட்டும் உயரவில்லை. வழக்கத்தை விட குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.

    கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஒரு மாதமாக அனைத்து காய்கறிகளும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. லாரி வாடகை உயர்த்தப்பட்ட பிறகும் கூட காய்கறிகள் விலை உயரவில்லை. வியாபாரம் மந்தமாக இருப்பதால் எல்லா காய்கறிகளும் மலிவாக கிடைக்கின்றன.

    இந்த நாட்களில் கடந்த ஆண்டில் 30 சதவீதம் விலை உயர்வு இருந்துள்ளது. ஆனால் தற்போது காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைவதற்கு காரணம் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    வெண்டைக்காய் கிலோ ரூ.15, கத்தரிக்காய் ரூ.10, பீட்ரூட் ரூ.8, நூல்கோல் ரூ.10, சவ்சவ் ரூ.10, காலிபிளவர் ரூ.15, தக்காளி ரூ.8 என அனைத்து காய்கறிகளும் விலை குறைவாக உள்ளது.

    இதுகுறித்து மார்க்கெட் மொத்த வியாபாரி சவுந்தர்ராஜன் கூறியதாவது:-

    மார்க்கெட்டில் எல்லா காய்கறிகளும் விலை குறைவாகத்தான் உள்ளன. லாரி வாடகை 25 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. ஆனாலும் இதனால் காய்கறிகள் விலையை உயர்த்த முடியவில்லை. மார்க்கெட்டுக்கு தினமும் 250 முதல் 300 லாரிகளில் காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன. அழுகும் பொருளான இவற்றை சேமித்து வைக்க இயலாது. அதனால் விலை உயர்த்தப்படாமல் குறைந்த விலைக்கே விற்கப்படுகிறது.

    காய்கறிகளை வாங்க வியாபாரிகள் இல்லை. வருகிறவர்களும் குறைந்த அளவில்தான் கொள்முதல் செய்கின்றனர். மக்களிடம் பணம் இல்லாததால் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. நஷ்டம் ஏற்படாமல் வியாபாரம் நடந்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டோம். ஒரு மாதமாக காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Vegetables #KoyambeduMarket

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. #KoyambeduMarket

    சென்னை:

    சென்னையில் காய்கறிகள் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகளவு காய்கறிகள் வருவதால் ஒரு சில காய் கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன.

    தக்காளி, முட்டைகோஸ், நூல்கோல், புடலங்காய், கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், பீட்ரூட் போன்ற காய்கறிகள் வரத்து அதிகமாக இருப்பதால் விலை குறைந்து வருகிறது.

    இதில் தக்காளி விலை கடந்த 10 நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. கிலோ ரூ.20, ரூ.15-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.7 ஆக சரிந்தது. கோயம்பேடு மார்க்கெட்டில் 3 கிலோ தக்காளி ரூ.25-க்கு கூவி கூவி விற்பனை செய்கிறார்கள்.

    மார்க்கெட்டிற்கு வழக்கமாக 300 முதல் 320 லாரிகளில் காய்கறிகள் வரும். ஆனால் தற்போது கூடுதலாக 50 லாரிகளில் தக்காளி வருவதால் விலை குறைந்துள்ளது. தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது குறித்து தக்காளி வியாபாரி தியாகராஜன் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வழக்கத்தை விட 70 லாரிகளில் கூடுதலாக தக்காளி வருகிறது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக வரத்து இருப்பதே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம். கேரளாவிற்கு செல்லக்கூடிய தக்காளி வெள்ளபாதிப்பால் சென்னைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இன்னும் அதிகளவு வரத்து இருந்தால் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.

    மொத்த வியாபாரி சவுந்தர்ராஜன் கூறுகையில், தக்காளி மட்டுமின்றி பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்து வருகிறது. கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்டதால் அங்கு செல்ல வேண்டிய காய் கறிகள் தமிழகத்திற்கு கூடுதலாக வருகின்றது. இதனால் காய்கறிகள் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது என்றார்.

    கோயம்பேடு மார்க் கெட்டில்இன்றைய மொத்த விற்பனை விலையில் காய் கறிகள் விவரம் வருமாறு:-

    தக்காளி (கிலோ)  - ரூ.7, கத்தரிக்காய் - ரூ.15, முட்டைகோஸ் - ரூ.10, பீட்ரூட் - ரூ.10 சவ்சவ் - ரூ.15, கோவக்காய் - ரூ.15, கொத்தவரங்காய் - ரூ.15, புடலங்காய் - ரூ.15, முள்ளங்கி - ரூ.10, உருளைக்கிழங்கு - ரூ.25, கேரட் - ரூ.30, வாழைக்காய் - ரூ.5, நூல்கோல் - ரூ.15, முருங்கைக்காய் - ரூ.15, சேனை கிழங்கு  - ரூ.25, சுரக்காய் - ரூ.10, பெரிய வெங்காயம் - ரூ.15, சின்ன வெங்காயம் - ரூ.50, பச்சை மிளகாய் - ரூ.20, வெள்ளரிக்காய் - ரூ.10, இஞ்சி (பழையது) - ரூ.80, இஞ்சி (புதியது) - ரூ.30.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளதால் மற்ற மார்க்கெட்டிலும் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக குறைவான காய்கறிகள்தான் மார்க்கெட்டுக்கு வருகிறது.

    இதன் காரணமாக காய்கறி விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளதால் மற்ற மார்க்கெட்டிலும் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

    சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ரகுபதி காய்கறி கடையில் இன்றைய விலை விபரம் கிலோவுக்கு வருமாறு:-

    கத்தரிக்காய் ரூ.20, தக்காளி ரூ.16, வெண்டைக்காய் ரூ.20, பீன்ஸ் ரூ.70, கேரட் ரூ.40, முள்ளங்கி ரூ.25, இஞ்சி ரூ.80, அவரைக்காய் ரூ.60.

    இதுபற்றி கடைக்காரர் ரகுபதி கூறுகையில், வெயில் அதிகமானதால் கோயம்பேடுக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் விலையேற்றம் உள்ளதாக தெரிவித்தார்.

    சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டை விட சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகளில் இன்னும் 10 ரூபாய் அதிகம் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். #tamilnews

    ×